Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
உங்கள் ஈரலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்!
22/11/2024 Duração: 16minநம்மில் பலருக்கும் ஏற்படக்கூடிய நோய்நிலைமைகளில் ஒன்று Fatty liver disease. இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்குத் தீர்வு என்ன என்பது உள்ளிட்ட விடயங்களை விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் - Gastroenterologist குமணன் நலங்கிள்ளி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
22/11/2024 Duração: 08minஇலங்கை புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் கன்னி அமர்வில் அதிபர் அனுரகுமார உரை நிகழ்த்தினார்; மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
போர்க்குற்றங்கள் செய்ததாக கூறி இஸ்ரேலின் பிரதமரைக் கைது செய்ய ஆணை
21/11/2024 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை.
-
லாவோஸில் நஞ்சூட்டிய பானம் அருந்திய மெல்பன் மாணவிகளில் ஒருவர் மரணம்
21/11/2024 Duração: 06minLaos இற்கு சுற்றுலா சென்ற மெல்பன் மாணவிகள் மெதனோல் கலந்த பானத்தை உண்டதனால் ஆபத்தான நிலையில் தாய்லாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Melbourne teen Bianca Jones dies in hospital after suspected methanol poisoning in Laos. Melbourne teen Bianca Jones has died in a Thai hospital, a week after a suspected methanol poisoning incident in neighbouring Laos that affected her and her best friend.
-
சிட்னி ரயில் வலையமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
21/11/2024 Duração: 02minசிட்னியின் ரயில் வலையமைப்பு மேற்கொள்ளவிருந்த பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தலை எதிர்கொள்பவர்களைப் பாதிக்கவுள்ள அரசின் சட்டத்திருத்தம்'
21/11/2024 Duração: 03minAlbanese அரசின் குடிவரவு தொடர்பான சட்டமுன்வடிவு, ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கு வழிசெய்யும் என மனித உரிமைகள் குழு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ?
21/11/2024 Duração: 09minஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
பணத்தாள்களைப் பயன்படுத்துகிறீர்களா?
20/11/2024 Duração: 06minநீங்கள் கடைசியாக பணத்தாள்களைப் பயன்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் பணத்தாள்களைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால், நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் பணத்தாள்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
-
Bunnings நிறுவனம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது - தனியுரிமை ஆணையர்
20/11/2024 Duração: 08minவாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமல், அவர்களது முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை Bunnings நிறுவனம் பயன்படுத்தியதன் மூலம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது என்று Privacy Commissioner - தனியுரிமை ஆணையர் கண்டுபிடித்துள்ளார்.
-
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்கு
20/11/2024 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 21/11/2024 - வியாழக்கிழமை
-
ஊதியம் இல்லாத overtime: ஆண்டுக்கு 91 பில்லியன் டொலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்!
20/11/2024 Duração: 02minஆஸ்திரேலிய பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 91 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய overtime-கூடுதல் வேலையை அதற்குரிய வருவாயைப் பெறாமல் செய்து வருகின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“முதுமை பருவத்தில் சன்னியாசம் போவது தமிழ் பண்பாடாகவே இருந்துள்ளது”
20/11/2024 Duração: 13minதமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் மூன்றாம் (நிறைவு) பாகம்.
-
“புத்த துறவியாக மாறும் முன்பே நான் மதத்தையும், சாதியையும் கடந்து வாழ்ந்தவன்”
20/11/2024 Duração: 16minதமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் இரண்டாம் பாகம்.
-
சிட்னியில் ஆயிரக்கணக்கில் தமிழ் குழந்தைகள் கலந்துகொண்ட விழா!
20/11/2024 Duração: 12minNSW மாநிலத்தில் இயங்கும் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் (Balar Malar Tamil Educational Association) தனது 47 ஆவது ஆண்டு தினத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமர்சையாக கொண்டாடியது. Blacktown Leisure Centre, Stanhope Gardens எனும் இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ் மழலைகள், சிறுவர்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொணடர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில் SBS தமிழ் ஒலிபரப்பு ஊடக அனுசரணை வழங்கி கலந்துகொண்டது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.
-
விக்டோரியாவிலுள்ள phone-detection கமராக்களில் நாளொன்றுக்கு 300 பேர் அகப்படுகின்றனர்!
20/11/2024 Duração: 02minவிக்டோரியா மாநிலத்தில் ஒன்பது phone and seatbelt detection கமராக்கள் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்த முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 83,400 அபராத கடிதங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்திய பேசுபொருள்: தமிழர்கள் வாழும் மும்பை ‘தாராவி’
20/11/2024 Duração: 10minமும்பையில் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வாழும் பகுதியாக அறியப்படும் தாராவி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Understanding Domestic Violence: insights and interventions - குடும்ப வன்முறை: சில விளக்கமும், முன்னெடுப்பும்
20/11/2024 Duração: 10minIt is emphasised that understanding domestic violence is crucial for everyone in the country. Against this backdrop, the Women in Health Network (WiHN), in collaboration with the Zen Tea Lounge Foundation, is organising an awareness session titled "Empowering Families to Find Safety Amid Violence." Krithika Muruganantham from the Women in Health Network (WiHN) will discuss domestic violence and provide insights into this initiative. Interviewer: RaySel. - நாட்டில் குடும்ப வன்முறை தொடர்பான புரிதல் அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த பின்னணில் Women in Health Network (WiHN) எனும் அமைப்பு Zen Tea Lounge Foundationயுடன் இணைந்து “Empowering - Families in violence find safety எனும் தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு NSW மாநிலத்தின் Smithfield, 15/108 எனும் இலக்கத்திலுள்ள Zen Tea Lounge Foundation எனும் இடத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்தும், குடும்ப வன்முறை குறித்தும் விளக்குகிறார் Women in Health Network (WiHN) எனும் அமைப்பின் கிருத்திகா முருகானந்தம் அவர்கள். அவரோடு உரை
-
வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் கைவிடப்படுமா?
20/11/2024 Duração: 07minநாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்கட்சி கூட்டணியும் கிரீன்ஸ் கட்சியும் தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
சிட்னி ரயில்வே வலையமைப்பு நான்கு நாட்கள் நிறுத்தப்பட வாய்ப்பு
19/11/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பிரிஸ்பேனில் கணவனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தியப்பெண்- பிந்திய தகவல்கள்
19/11/2024 Duração: 03minபிரிஸ்பேன் லோகனில் கணவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண், தான் கொலை செய்யப்பட்டால் அதற்குத் தனது கணவன்தான் பொறுப்பு என்பதாக வீடியோ ஒன்றை முன்கூட்டியே பதிவுசெய்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார்இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.