Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
ரஷ்யா படையெடுத்து 29 மாதங்களுக்கும் பின்னர், யுக்ரேனில் F-16 போர் விமானங்கள்
05/08/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/08/2024) செய்தி.
-
சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு வீடு இல்லை - தடை விதிக்கும் நகரம்
04/08/2024 Duração: 01minநவம்பர் 2028-இல் , தற்போது குறுகிய கால வாடகையாக அங்கீகரிக்கப்பட்ட 10,101 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமங்களை பார்சிலோனா ரத்து செய்யவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
மெல்பனில் legionnaires' நோயால் ஒருவர் மரணம் - தொற்று பரவலுக்கு என்ன காரணம்?
04/08/2024 Duração: 02minமெல்போர்னில் legionnaires' நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
இந்த வார முக்கிய செய்திகள்
02/08/2024 Duração: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 3 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
இந்தியாவிற்கான விமானக் கட்டணம் குறைகிறது - காரணம் என்ன?
02/08/2024 Duração: 02minகடந்த ஆண்டை விட சராசரியாக 13 சதவீதம் விமானக் கட்டணம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல பிரபலமான இடங்களுக்கு விலைகள் குறைந்து வருவதாகவும் புதிய தரவு காட்டுவதாக Flight Centre Australia கூறுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
02/08/2024 Duração: 08minஇலங்கையில் அதிபர் தேர்தல் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றன; வடக்கு கிழக்கில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள் நடைபெற்றன; தமிழ் வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு கலந்துரையாடல் என்ற பல செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Good reasons to observe the pedestrian road rules - கால்நடையாக சென்றாலும் சாலை விதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?
02/08/2024 Duração: 09minEvery day, pedestrians across Australia break the law without knowing it. This can result penalties and occasionally accidents. Stay safe and avoid an unexpected fine by familiarising yourself with some of Australia’s common pedestrian laws. - நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், கால்நடையாக செல்பவர்களும் தங்களை அறியாமல் சட்டத்தை மீறுகிறார்கள். இதற்கு அபராதம் கட்ட வேண்டி வருவது ஒரு புறம் இருக்க, சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கலாம். கால்நடை செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம், அத்துடன் எதிர்பாராத அபராதத்தைத் தவிர்க்கலாம்.
-
பனிப் போருக்குப் பின் ரஷ்யாவுடன் நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்
02/08/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/08/2024) செய்தி.
-
What Are the Effects of Social Media on Seniors? - சமூக வலைத்தளங்களும் முதியவர்களும்
01/08/2024 Duração: 14minSocial media have become prominent parts of life for many people today. Most people engage with social media without stopping to think what the effects are on our lives, whether positive or negative. This feature talks about the impact of social media on seniors. - பொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு முதியவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
புதிய Workplace Justice விசா புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்குமா?
01/08/2024 Duração: 08minஆஸ்திரேலியாவிற்கு Work visa-வில் பணி செய்ய வருபவர்கள் பணியிட சுரண்டலுக்கு ஆளாகும்போது அவர்களுக்கென Workplace Justice விசா என்றொரு புதிய விசா ஒன்றை அரசு கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
What is the actual reason for the White House to honour Prof. Sivalingam Sivananthan - வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன?
01/08/2024 Duração: 27minBorn in Chavakacheri, Sri Lanka, Prof. Sivalingam Sivananthan is a world-renowned physicist as well as a successful entrepreneur in creating advanced military infrared night vision technology, which has also served as the platform for ground-breaking, next generation solar cells. He was recently recognised by the White House as a "Champion of Change" – one of the best and brightest from around the world who are helping create American jobs, grow our economy, and make our nation more competitive. - அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்த பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
-
கட்டாயத் திருமணம் செய்து வைத்த தாய்க்கு சிறை தண்டனை!
01/08/2024 Duração: 06minஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் சட்ட விரோதமானது. விக்டோரியா மாநிலத்தில் கட்டாயத் திருமணம் செய்ய காரணமாக இருந்த ஒருவருக்கு முதல் முறையாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து SBS News-இற்காக Rayane Tamer ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
ஹமாஸின் அரசியல் தலைவர் ஈரானில் படுகொலை!
31/07/2024 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 01/08/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
The risks of not getting the flu vaccine - Flu – காய்ச்சல் தடுப்பூசி போடாமலிருந்தால் என்ன நடக்கும்?
31/07/2024 Duração: 08minDespite widespread recommendations for flu vaccination, recent statistics reveal a significant decline in vaccination rates across the country. Dr. Shanthini Thavaseelan, a general practitioner and specialist in women's health in NSW discusses the factors contributing to this trend, potential solutions to address it, and the benefits of getting vaccinated. Produced by RaySel. - Flu - காய்ச்சல் வராமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இதற்கான காரணம் என்ன, அதை எப்படி போக்குவது, தடுப்பூசி போடுவதன் நன்மைகள் என்ன என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
Tap-water review due to cancer-causing chemical fears - 'not to worry' - நாட்டிலுள்ள குடிநீரில் புற்றுநோய் chemicals? - 'கவலை வேண்டாம்'
31/07/2024 Duração: 11minNews reports warned Australians that substances known as "forever chemicals" have been found in drinking water supplies around our country. Dr Para Parameshwaran is a Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminants of emerging concern and membrane technology for water and wastewater treatment and he urges people to not to worry. Segment produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள குடிநீர் நிலைகளில் “forever chemicals” என்று அறியப்படும் வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பற்ற நிலைகளைத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய உண்மை நிலைமையினை அறியும் நோக்குடன் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் வாய்ந்த Process Engineer கலாநிதி பரா பரமேஸ்வரன் (Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminats of emerging concern and membrane technology for water and wastewater treatment) அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபா
-
அகதிகள் ஒலிம்பிக் அணி என்றால் என்ன, அதில் யார் இருக்கிறார்கள்?
31/07/2024 Duração: 02minInternational Olympic Committee IOC-ஆல் உருவாக்கப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறது அகதிகள் ஒலிம்பிக் குழு. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
கேரளா வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!
31/07/2024 Duração: 07minஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்; இழப்பு தொடர்கிறது. மேலும், இந்தியாவின் சிறுபான்மை மக்கள் குறித்த தகவல் என்று செய்தியின் பின்னணிகளை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Selective School: மாணவர்கள் அங்கு செல்வதால் உண்மையில் பயன் இருக்கிறதா?
31/07/2024 Duração: 10minபுலம்பெயர்ந்து இங்கு குடி வந்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, பொது பாடசாலைகளுக்கு அனுப்புவதை விட, selective school எனப்படும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
-
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற உங்கள் நண்பர் யார் என்பது முக்கியம்!
31/07/2024 Duração: 09minஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது நமக்கு தெரிந்த ஒருவர் நம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த நடைமுறை பற்றியும் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றியும் செல்வியுடன் உரையாடுகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள்.
-
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய விசா அறிமுகம்
30/07/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 31/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.